கலெக்டர் ஆபீசுக்கு கீரிப்பிள்ளை விசிட்
கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று ஹாஜிக்கள் தேர்வு தொடர்பான கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்து கொண்டிருந்தது.அப்போது, அலுவலக வடக்கு நுழைவாயிலில், திடீரென கீரிப்பிள்ளை ஒன்று வேகமாக நுழைந்தது. அதைக் கண்ட பொதுமக்களும், அலுவலக பணியாளர்களும் பயந்து ஓடினர்.இவர்களை பார்த்த கீரிப்பிள்ளை, மிரண்டு போய் நுழைவாயிலுக்கு தெற்கே பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தின் பின்பகுதியிலுள்ள புதருக்குள் ஓடி பதுங்கியது.இது குறித்து வனத்துறையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் புதரில் தேடியும் கீரிப்பிள்ளை சிக்கவில்லை.