உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னையை வாட்டும் கேரள வேர் வாடல் நோய்

தென்னையை வாட்டும் கேரள வேர் வாடல் நோய்

பொள்ளாச்சி: கேரள வேர் வாடல் நோய்க்கு, மருந்து கண்டறிந்து, மானிய விலையில் வழங்க வேண்டும் என, தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தென்னை வளர்ச்சி வாரிய தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கேரள வேர் வாடல் நோயால், தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நோயைக் கட்டுப்படுத்த போதிய நிதி ஒதுக்கி, ஆய்வு செய்து, மானிய விலையில் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட தென்னை ரகங்களை உற்பத்தி செய்து வினியோகிக்க வேண்டும்.கோவையில் அமைந்துள்ள மண்டல அலுவலகம் வாயிலாக, 10 ஆயிரம் ெஹக்டேர் பரப்பில், செயல்முறை விளக்கப் பண்ணை அமைக்க வேண்டும். இப்பணிக்கு தென்னை விவசாய சங்கங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை