மேலும் செய்திகள்
பட்டமளிப்பு விழா
15-Mar-2026
கோவை: வேதாந்தா அகாடமியில் 41 கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காயத்ரி ஓம் சரவணன், குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி அவசியம் என்பதை வலியுறுத்தி பேசினார். கல்வியுடன் கூடிய நற்பண்புகள், திறன்கள் ஆகியவை சிறுவயதிலேயே வளர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அகாடமியின் இயக்குனர் சுதர்ஷன் ராவ் பேசுகையில், குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான கல்வி முறைகள் குறித்து விளக்கமளித்தார். மாணவர்களின் ஓராண்டு கல்வி செயல்பாடுகளை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டன.
15-Mar-2026