உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீயில் கருகி கூலி தொழிலாளி பலி கிணத்துக்கடவு போலீசார் விசாரணை

தீயில் கருகி கூலி தொழிலாளி பலி கிணத்துக்கடவு போலீசார் விசாரணை

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ், 28. சென்டிரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி திவ்ய பாரதி, 27. தனியார் ஸ்வீட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.சுபாஷ்சந்திரபோசிற்கு கடந்த சில நாட்களாக வேலை இல்லாததால், மன உளைச்சலில் இருந்தார். இதில், கடந்த 21ம் தேதி, விரக்தி அடைந்து வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.இவரது அருகில் குழந்தை இருந்ததால், சிறிய அளவில் குழந்தைக்கு தீ காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.சிகிச்சையின் போது சுபாஷ்சந்திரபோஸ் மருத்துவர்களிடம் கூறுகையில், வீட்டில் திடீரென பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, வீட்டில் இருந்த கெரசினை பாம்பின் மீது ஊற்றி தீ வைத்தேன். இதில், அருகில் இருந்த குழந்தை மீது தீக்காயம் ஏற்பட, குழந்தையை காப்பாற்ற முன் சென்றதில், என் மீது தீப்பற்றியது' என தெரிவித்தார். இந்நிலையில், நேற்று சுபாஷ் சந்திரபோஸ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை