உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு கிட்

ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு கிட்

கோவை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த முறையை, தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்க உள்ள சூழலில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பதிவேடுகள் மற்றும் எழுது பொருட்கள், தொப்பி ஆகியவை அடங்கிய பையை, கலெக்டர் பவன்குமார் வழங்கினார். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்புகூட்டத்தில், பத்து சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். 'சட்டசபை தேர்தல் பணிகளில் ஒவ்வொரு பணியாளரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்' என கலெக்டர் அறிவுரை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கலெக்டர் நேர்முக உதவியாளர் தேர்தல் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ