உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.ஐ.டி., கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

கே.ஐ.டி., கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவை;கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுரரியில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, கல்லுாரி கலையரங்கத்தில் நடந்தது. கல்லுாரி நிறுவன தலைவர் பொங்கலுார் பழனிசாமி தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை, மைண்ட் ப்ரெஷ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கீர்த்தன்யா பேசுகையில், ''அர்ப்பணிப்புள்ள எந்தவொரு மாணவரும், தேர்வில் வெற்றிபெற முடியும். அதற்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும்,'' என்றார்.கணிதம், இயற்பியல் வேதியியல் மற்றும் பிற தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றில், தேர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்து, பாட வல்லுனர்கள் விளக்கினர். மாணவர்களின் வினாக்களுக்கும் பதிலளித்தனர்.கல்லுாரியின் துணைத்தலைவர் இந்துமுருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி