வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கற்றலில் எந்த அளவுக்கு முன்னேற்றம் உள்ளது என்ற அடிப்படையை கூட தெரிந்து கொள்ளாமல் மேலும் மேலும் ஒரு குழந்தையை படிக்க சொல்வது அந்த குழந்தையின் அறிவு வளர்ச்சியை சிதைப்பதாகும். இப்புரிதல் கூட இல்லாமல் நீட் தேர்வை இணைப்பது விந்தையாக உள்ளது
கல்வி மந்தரி பிள்ளை ஜெர்மன் படிக்கிறான் என்கிறவர் தன் பிள்ளையை குலக்கல்வி திட்டத்தில் சேர்ப்பாரா?
திமுக ஆதரித்தால் மக்கள் எதிர்ப்பார்கள் எதிர்த்தால் ஆதரிப்பார்கள் என்ற ஒரு வினோதமான மனநிலை. இதில் அரசியல் கட்சிகளுக்கு ஆதாயமோ நட்டமோ இல்லை இளம் தலைமுறைக்குத்தான் என்று உணர வேண்டும் பண மதிப்பிழம்பில் எந்த அரசியல் வியாதியும் தெருவில் நிற்கவில்லை மாறாக மத்திய தர குடும்பங்கள்தான் சிரமப் பட்டது தனியார் பள்ளிகளில் pre-kg சேர லக்ஷக்கணக்கில் வாங்குகிறார்களென்றால் அதற்கான டிமாண்ட்தான் காரணம் என் பிள்ளை டாக்டராகணும் இஞ்சினீர் ஆகணும்னு ஏழைகளும் கனவு காண்கிறார்கள். PM ஸ்ரீ திட்டத்தில் மூன்றாவது ஐந்தாவது எட்டாவதில் அகில இந்திய தேர்வு என்றால் நீட் தேர்வுபோல டில்லிக்கு காவடியெடுக்க வேண்டியிருக்கும். நீட் தேர்வில் ருசி கண்டவர்கள் விரிக்கும் சுருக்குமடி வலையிது என்பதை இங்குள்ள பிஜேபி ஆதரவாளர்கள் புரிந்து கொண்டு உஷார் ஆகவேண்டும். மூன்றாவது ஐந்தாவதில் பெயில் ஆனால் கல்வியை தொடர்வதில் சிக்கலாகி பிள்ளையின் வாழ்க்கையே சூன்யமாகலாம் முன்பெனல்லாம் டென்த் ப்ளஸ்டூன்னு முடிச்சுட்டு பசங்க வேலை தேடுகிறேன் பேர்வழின்னு ஊர் சுற்ற ஆரம்பித்தார்கள் அதை தடுத்து நிறுத்தி இப்போது மாதம் ஆயிரம் தந்து மேற்படிப்பை தொடர செய்திருக்கிறார்கள் அது பிஜேபியின் கண்ணை உறுத்தி இந்த திட்டத்தைக் கொண்டுவந்து தமிழக இளைஞர்களின் வாழவை நிர்மூலமாக்கப் பார்க்கிறார்கள். குலக்கல்வி திட்டத்துக்கு ஆள் பிடிக்கிறார்கள்.
மிகவும் போட்டிகள் நிறைந்த இந்த கால கட்டத்தில் மாணவர்கள் விரும்பி ஜேர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளை கற்கிறார்கள். அதனால் பிற்காலத்தில் அவர்கள் வெளிநாடுகளுக்கு மேல் கல்விக்காகவோ அல்லது வேலை வாய்ப்புக்காகவோ செல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. இதுமட்டுமல்லாமல் வாய்ப்பட்டு, இசைக்கருவிகள் இசைப்பது, நடனம், சிலம்பம், தற்காப்புக்கலை என பலவற்றையும் மாணவர்கள் கற்று பலதுறைகளில் வளர்ச்சியடைகின்றார்கள். இவை எல்லாமே பணம் செலவழித்து மட்டுமே சாத்தியப்படுகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் எதுவுமே கிட்டுவதில்லை. அதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை. புதிய கல்விக்கொள்கையின்படி இந்த வாய்ப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும். இந்த கல்வித்திட்டம் கல்விக்கொள்கை கமிட்டியின் பரிந்துரையால் மத்தியஅரசால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒரு அரசியல் கட்சியின் இருமொழி கொள்கையால் பாதிக்கப்படுவது அரசு பள்ளி மாணவர்கள்தான். எதை படிக்கவேண்டும் என படிக்கும் மாணவர்களும் பெற்றோரும் தீர்மானிக்கவேண்டும். சம்பந்தம் இல்லாத அரசியல் கட்சிகள் அல்ல
இளம் வயதில் கற்று கொள்வது என்பது மிகவும் எளிது. மூன்றாவது மொழி என்பது அவர்களுக்கு ஒரு பாரமே கிடையாது இங்குள்ள அரசியல் வியாதிகள்தான் மக்களை முட்டாளாகவே வைத்திருக்க எல்லா தந்திரங்களையும் உபயோகிப்பர்
அரசு பள்ளியில் மூன்றாவது கற்றுக்கொடுத்தால் இன்னும் நிறைய பேர் அரசு பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள். இது அரசுக்கு மதிப்பு கூடும் அதை விடுத்து மும்மொழியை ஒழிப்பேன் என்று சொல்வது மூடத்தனமானது. அண்ணாமலை நான்கு ஐந்து மொழி கற்றதால் வெவ்வேறு மொழியில் பேசி அசத்துகிறார் அது மாதிரி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு ஒரு மொழியில் பேசினால் பெற்றவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும். அமைச்சர்கள், எம்பிக்கள் அரசியல் வாதிகள் பிள்ளைகள் மூன்றாவது மொழியை படிக்க வேண்டுமாம்
தமிழையும் இங்கிலீஷையும் நல்லா படிங்க. மூன்றாவது மொழியை முடிஞ்ச அளவு படிங்க. இந்தி என்று மூன்றாவது மொழியை படிக்கும் பொது இந்தி ஆதிக்கம் பெறலாம். ஏதாவது ஒரு மொழியை அவரவர் விருப்பத்திற்கேற்ப ஏற்ப படித்தால் ஒரு குறிப்பிட்ட மொழி நம்மை ஆட்டவோ அசைக்கவோ செய்து விடாது. படிக்கும் வயதில் எதை படித்தாலும் பசுமரத்தாணி போல பதியும்படி ஏறும். இன்னொரு மொழியை நாம் கற்பது நம் வாழ்க்கை வளர்ச்சி தேவைக்கு தானே தவிர, அந்த மொழியை வளர செய்வதற்காக அல்ல.கல்வி கரையில்லாதது. ஒரு மொழி தவிர்த்து இன்னும் இரண்டு மொழியை கற்ற ஒருவர் முதல்வர்ஆக அமைந்து நாடு விட்டோ மாநிலம் விட்டோ செல்லும்போது பேச முடிந்தால் நமக்கு எல்லாம் எவ்வளவு பெருமையாக இருக்கும். நமது ஆளுநரே தமிழ் மொழியை கற்கிறார். என்றைக்கோ கற்று இங்கே வந்திருந்தால் அவருக்கும் எவ்வளவு எளிதாக இருந்திருக்கும். இன்றைக்கு வந்த அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது தானே சரி.
கொறச்ச விலைக்கு வருது ரெண்டு யானையா வாங்கிடுங்க
மேலும் செய்திகள்
இன்று வெற்றி பெறாதவர்கள் நாளை வெற்றி பெறலாம்
29-Jan-2025