உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐ.சி.ஏ.ஆர்., தென் மண்டல கபடி போட்டியில் கலக்கிய கொச்சி அணி

ஐ.சி.ஏ.ஆர்., தென் மண்டல கபடி போட்டியில் கலக்கிய கொச்சி அணி

கோவை; ஐ.சி.ஏ.ஆர்., தென் மண்டல கபடி போட்டியில், கொச்சி சி.எம்.எப்.ஆர்.ஐ., அணி, 39-23 என்ற புள்ளிகளில், மும்பை சி.ஐ.எப்.இ., அணியை வென்றது.கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் சார்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக(ஐ.சி.ஏ.ஆர்.,) தென் மண்டல விளையாட்டு போட்டி, கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் முதல் வரும், 11ம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் நாளான நேற்று, ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி மைதானத்தில், கபடி 'லீக்' சுற்று துவங்கியது. முதல் போட்டியில், கொச்சி சி.எம்.எப்.ஆர்.ஐ., அணியும், மும்பை சி.ஐ.எப்.இ., அணியும் மோதின. பரப்பான ஆட்டத்தில், 39-23 என்ற புள்ளி கணக்கில் கொச்சி அணியும் வெற்றி பெற்றது. இரண்டாம் ஆட்டத்தில், ஹைதராபாத் ஐ.ஐ.ஆர்.ஆர்., அணியும், டில்லி ஐ.ஏ.ஆர்.ஐ., அணியும் விளையாடின.இதில், ஐ.ஏ.ஆர்.ஐ., டில்லி அணி வீரர்கள் ஆரம்பம் முதலே, ஆக்ரோஷமாக விளையாடி, 62-17 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர். முன்னதாக நடந்த ஆண்களுக்கான, 400 மீ., ஓட்டத்தில் காசர்கோடு சி.பி.சி.ஆர்.ஐ., நிறுவனத்தை சேர்ந்த ராமாவத் பாண்டு, கொச்சி சி.எம்.எப்.ஆர்.ஐ., நிறுவன கவுசிக், அனீஸ் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.தொடர்ந்து, 100 மீ., ஓட்டத்தில், டில்லி ஐ.ஆர்.ஐ., நிறுவன ஆரத் சிராரி, கொச்சி சி.எம்.எப்.ஆர்.ஐ., நிறுவன ராஜேந்திரன், டில்லி ஐ.ஆர்.ஐ., நிறுவன சச்சின் ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். பெண்களுக்கான போட்டியில், ஹைதராபாத் 'கிரிடா' நிறுவன விசா குமாரி, பெங்களூரு 'நிவேதி' நிறுவன ஆச்சல் பலவேல், ஐ.ஐ.எச்.ஆர்., நிறுவன மீனாட்சி ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி