இன்ஜினியரிங் கவுன்சில் தேவை கொஜினா விடுக்கிறது கோரிக்கை
கோவை: கோவை மண்டல கட்டடப் பொறியாளர்கள் சங்கம்(கொஜினா) சார்பில், வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள ஹோட்டலில், தொழில்நுட்ப பயிலரங்கு நடந்தது. ஏ.சி.சி., அதானி சிமென்ட் நிறுவனத்தை சேர்ந்த, இளந்தென்றல் மற்றும் பொறியாளர் கண்ணன் ஆகியோர், 'வெற்றிக்கு வழிவகுக்கும் யுத்திகள்' என்ற தலைப்பில் கருத்துகள் தெரிவித்தனர். கட்டுமான துறையில் நவீன தொழில் நுட்பங்கள், பயன்பாட்டு முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சங்கத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் மாதாந்திர கூட்டம் நடந்தது. மத்திய, மாநில அரசுகள் இன்ஜினியரிங் கவுன்சில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர் தாமோதரசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.