உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோளராம்பதி குளம் செந்நிறமாக மாறியது

கோளராம்பதி குளம் செந்நிறமாக மாறியது

தொண்டாமுத்துார் : நாகராஜபுரம் -- பேரூர் ரோட்டில் உள்ள கோளராம்பதி குளத்தின் நீர் செந்நிறமாக மாறியுள்ளதால், நீரை பரிசோதனை செய்ய சுற்றுச்சூழல்துறைக்கு, பொதுப்பணித்துறையினர் கடிதம் அனுப்ப உள்ளனர்.நாகராஜபுரம் -- பேரூர் ரோட்டில், 34 ஏக்கர் பரப்பளவில், இயற்கை எழில் சூழ கோளராம்பதி குளம் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்காலான கீழ்ச்சித்திரைச்சாவடி வாய்க்கால் மூலம் இக்குளத்திற்கு நீர் வருகிறது.குளத்தில், ஏராளமான கருவேல மரங்கள் உள்ளன. இக்குளத்தில், சீசன் காலங்களில் வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். தற்போது கோடை காலம் என்பதால், குளத்தில் நீர் வெகுவாக குறைந்துள்ளது.இந்நிலையில், குளத்தில் நீர் முழுவதும் செந்நிறமாக மாறியுள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்விற்கு பின், குளத்தில் உள்ள கருவேல மரத்தின் பட்டைகளில் இருந்து, இந்த நிறம் வந்திருக்கலாம். குளத்தின் நீரை ஆய்வு செய்ய, சுற்றுச்சூழல்துறை பொறியாளருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !