தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி: கோலாபுரியும் கிடைக்கும்; கொரியன் பேன்சியும் ஜொலிக்கும்!
கோவையின் 'நம்பர் ஒன்' நாளிதழான 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி நடத்தப்படுகிறது. உங்கள் இதயம் விரும்பும் டிரெண்டிங் பேன்சி நகைகள் எல்லாமே இங்கு ஒரே இடத்தில் வாங்கலாம். வாங்கவே முடியாத அளவுக்கு தங்கம் விலை ஏறிக் கொண்டிருக்கையில், ஒரு கிராம் கோல்டு ஜூவல்லரிகளின் பக்கம் பெண்கள் கவனம் திரும்பியுள்ளது. கண்காட்சிகளில் மட்டுமே கிடைக்கும், அரிய ஒன் கிராம் ஜூவல்லரி கலெக்சன் உள்ளன. தினசரி அணிய, பங்சன் மாடல்ஸ் மற்றும் மணப்பெண்களுக்கான பிரைடல் ஜூவல்லரி செட்களும் உள்ளன. ஸ்டட்ஸ், டிராப்ஸ், டேங்கல்ஸ் காதணிகளை பார்த்து வியந்து போவீங்க. எதை வாங்க வேண்டும் என திணறடிக்கும் வகையில் செயின், ஹாரம், நெக்லஸ் செட்கள் உள்ளன. இரண்டு கைகள் பத்தாது என நீங்க பீல் பண்ணும் அளவிற்கு, வளையல் மாடல்கள் உள்ளன. மோதிரங்களிலும் கொட்டிக்கிடக்கிறது வெரைட்டி. ஆன்டிக் ஜூவல்லரி, ஒயிட் ஸ்டோன் மற்றும் வண்ண கற்கள் பதித்த ஜூவல்லரி, முத்து ஜூவல்லரி, பீட்ஸ் ஜூவல்லரி, சில்வர் ஜூவல்லரி என, இதுவரை பார்த்திராத வெரைட்டிகள் உள்ளன. ரூ.200 முதல் ரூ.5 ஆயிரம் வரை நகைகள் கிடைக்கின்றன. கொஞ்சம் ஸ்டைலாக வேண்டுமென்றால், பேன்சி நகை பக்கம் வரலாம். சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா நகரங்களில் தயாரிக்கப்படும் பேன்சி நகைகள் உள்ளன. சீனா, கொரியா, ஜப்பானில் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டட்ஸ், செயின்ஸ், ஹேண்ட் பேண்ட், கிளிப், பிரேஸ்லேட் உள்ளது. முழுக்க, முழுக்க கைகளால் கலைநயத்துடன் செய்யப்படும் காண கிடைக்காத கலெக்சனும் உள்ளன. பார்ப்பதற்கு ஸ்டைலிஷாக, அதே சமயம் குறைந்த விலையில் கிடைக்கிறது. 50 ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரையில் டிசைனுக்கு ஏற்ப கிடைக்கிறது. துாய்மையான லெதரில், ஹேண்ட் பர்ஸ், ஷோல்டர் பேக், லேப்டாப் பேக், ஹேண்ட் பேக், டிராவல் பேக், கிராஸ் பேக் என அனைத்து மாடல் பேக்குகளும் உள்ளன. உலக பிரசித்தி பெற்ற கோலாபுரி செருப்புகளும் வாங்கலாம். கைகளால் செய்யப்படும் இந்த வகை செப்பல்களில் அசர வைக்கும் வேலைப்பாடுகள் இருக்கும். ஒரு வயது குழந்தை முதல் பெரியவர்களுக்கு வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. ரூ.350 மற்றும் ரூ.550 முதல் அளவுகள், வேலைப்பாடுகளுக்கு ஏற்ப ஆபர் விலையில் கிடைக்கிறது. சேலை, சுடிதார், ஜீன்ஸ் ஆடைகளுக்கேற்ற அணிய பேன்சி செப்பல்கள் வெரைட்டிகளும் கிடைக்கும். அம்மா மட்டும் வாங்கறாங்கனு குட்டி இளவரசிகள் கோவிக்கலாம். குழந்தைகளை கவரும் வகையில் கியூட் மாடல்களில் அனைத்து வித பேன்சி நகைகளும் உள்ளன. கடைகளில் பத்து பார்த்தால் ஒண்ணு பிடிக்கும். இங்கு பார்க்கும் எல்லாமே பிடிக்கும். வரும்போது பேன்சிக்குனு தனி பட்ஜெட் ஒதுக்கிடுங்க. அள்ளி அள்ளி எடுத்தாலும், பட்ஜெட் எகிறாது.