உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

நெகமம்; நெகமம், காட்டம்பட்டிபுதூரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள், விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில், 28ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா, வரும், 14ம் தேதியன்று நடக்கிறது. இதில், காலை 10:00 மணிக்கு, ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. இரவு 7:30 மணிக் கு, பஜனை மற்றும் உரியடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடக்கிறது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி