மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்(கோவை)
14-Sep-2025
போத்தனூர்; கோவை, சுந்தராபுரம் அடுத்து மாச்சம்பாளையத்தில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கடந்த, 12ல் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து பஜனை, கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகள் வீதியுலா, சிறுவர்களுக்கு பரிசு வழங்கல், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொது தேர்வில், 80 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, நினைவு பரிசு வழங்கல் உள்ளிட்டவை நடந்தன. நிறைவு நாளான நேற்று, சுக்கு பொடி மாற்றுதல் மற்றும் குழந்தை கிருஷ்ணரை தொட்டிலில் இடுதல், மாலை சிறப்பு பூஜை, உறியடித்தல் நடந்தன. இரவு வழுக்கு மரம் ஏறுதல், கிருஷ்ணர் ரதம் வீதியுலா உள்ளிட்டவை நடந்தன. ஏற்பாடுகளை யாதவ இளைஞரணி மற்றும் யாதவ இளைஞர் நல சங்கத்தினர் செய்திருந்தனர்.
14-Sep-2025