உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கிருஷ்ணகிரி லவ் ஜிகாத் விவகாரம் சிறுமியை கடத்தியவர், பெற்றோர் கைது

 கிருஷ்ணகிரி லவ் ஜிகாத் விவகாரம் சிறுமியை கடத்தியவர், பெற்றோர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை சேர்ந்த வேன் டிரைவர் ஒருவருக்கு சொந்தமான கட்டடத்தில், முஸ்லிம்பூரை சேர்ந்த வாலிபர் அப்துல் கைப், 21, என்பவர் மெக்கானிக் கடை வைத்திருந்தார். அவர், வேன் டிரைவரின் மகளான, 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி, அக்., 23ல் கடத்தினார். கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தந்தை புகாரளித்தும், இரு தரப்பினரிடமும் கையெழுத்து மட்டும் வாங்கி, வழக்குப்பதியாமல் சிறுமியை அப்துல் கைப்புடன் போலீசார் அனுப்பினர். மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் சென்று முறையிட்டு, தந்தை தன் மகளை மீட்டு வந்தார். மகளிடம் அவர் விசாரித்த போது, சிறுமிக்கு பெயர் மாற்றி, புர்கா அணிவித்து, உருதில் எழுதப்பட்ட ரிஜிஸ்டரில் கையெழுத்திட வைத்து, இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து, கட்டாயப்படுத்தி முதலிரவு நடத்தியது தெரிந்தது. சிறுமியின் பெற்றோர் மற்றும் வி.எச்.பி., நிர்வாகிகள், 19ம் தேதி கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், சிறுமியை கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துள்ளனர். வழக்கை அலட்சியமாக விசாரித்த எஸ்.ஐ.,க்கள் விஜயவாணி, அமுதா ஆகியோரை, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பணியிட மாற்றம் செய்தார். சிறுமியை கடத்திய வாலிபர் மீது, போக்சோ வழக்குப்பதிய உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையில், ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜம் விசாரிக்கவும் உத்தரவிட்டார். அதன்படி, சிறுமியை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து சீரழித்த அப்துல் கைப், 21, அவரது தந்தை அப்துல் கபார், 56, தாய் நசீமா, 48, ஆகியோரை போக்சோ வழக்கில் கிருஷ்ணகிரி மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை தொடர்கிறது என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை