கன்னிமார் கோவிலில் ஏப்.4ல் கும்பாபிஷேகம்
கருமத்தம்பட்டி; செம்மாண்டாம்பாளையம் புதுார் கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா, ஏப்., 4 ம்தேதி நடக்கிறது. செம்மாண்டாம்பாளையம் புதுாரில் உள்ள மகா கணபதி, சப்த கன்னிமார், கருப்பராய சுவாமி , மூடி அம்மன் கோவில்கள் பழமையானவை. விமானம், கோபுரம், வசந்த மண்டபம், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வருகின்றன.வரும், ஏப்., 2 ம்தேதி மாலை, 4:00 மணிக்கு, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. நான்கு கால ஹோமங்கள் முடிந்து, ஏப்., 4 ம்தேதி, 9:30 மணிக்கு விநாயக பெருமானுக்கும், 10:00 மணிக்கு சப்த கன்னிமாருக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.