உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உச்சிமாகாளியம்மன் கோவிலில் செப். 11ல் கும்பாபிேஷகம்

உச்சிமாகாளியம்மன் கோவிலில் செப். 11ல் கும்பாபிேஷகம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, சமத்துார் உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, செப். 8ம் தேதி, இரவு 7:00 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜை, புண்யாஹம், வாஸ்துசாந்தி நடக்கிறது. செப். 9ம் தேதி காலை 5:00 மணிக்கு கணபதி, நவக்கிரக, ஸ்தந்தகுரு யாகம், காலை, 10:30 மணிக்கு அங்குரார்பணம், ரக் ஷாபந்தனம்,கும்பஸ்தாபனம், கலாகர்ஷணம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு பாலாலய இடத்திலிருந்து யாகாலயத்திற்கு அழைத்து வருதல் நடக்கிறது. மாலை, 4:00 முளைப்பாரி மற்றும் தீர்த்தம் எடுக்கப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு முப்பெரும்தேவிக்கு முதற்கால யாகவேள்வி நடக்கிறது. செப். 10ம் தேதி காலை, 7:00 மணிக்கு இரண்டாம்கால யாக வேள்வி, காலை 9:00 மணிக்கு பரிவார அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலை 6:30 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி, இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு நவரத்ன யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. செப். 11, காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகவேள்வி, கடம்புறப்பாடு, யாத்ராதானம், காலை, 10:00 மணிக்கு விமான கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, மகா அபிேஷகம், திருக்கல்யாணம் மற்றும் அலங்கார பூஜைகள், அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை