உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழா

அன்னுார்; மேற்கு மாணிக்கம் பாளையம் மாணிக்க விநாயகர், பாலமுருகன், மங்களநாயகி உடனமர் மாசீஸ்வரசாமி கோவிலில் நேற்று முன்தினம் மங்களநாயகி உடனமர் மாசீஸ்வரசாமி, மாணிக்க விநாயகர், பாலமுருகன் மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. குப்பனூர் ஊராட்சி, பொம்மம்பாளையத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் மற்றும் பட்டத்தரசி அம்மன் கோவிலில் கடந்த 4ம் தேதி மாலை திருவிளக்கு ஏற்றுதலும், வேள்வி பூஜையும் நடந்தது. இரவு தெய்வ திருமேனிகளை பீடத்தில் நிறுவி, எண் வகை மருந்து சாத்தப்பட்டது.நேற்றுமுன்தினம் காலை செல்வ விநாயகர் மற்றும் பட்டத்தரசி அம்மனுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் அருளுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை