உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா தீவிரம்

மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா தீவிரம்

ஆனைமலை; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.ஆனைமலையில் மாசாணியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜ கோபுரம் பாலாலயம் நடந்தது. கடந்த, 14ம் தேதி மூலஸ்தானம் மற்றும் பரிவார சன்னதிகளுக்கு பாலாலயம் நடந்தது.இதை தொடர்ந்து, 65 அடி உயரம் உள்ள ராஜ கோபுரத்துக்கு, 35 லட்சம் ரூபாய் செலவில் வர்ணம் பூசுவதற்காக சாரம் கட்டப்பட்டு வர்ணம் பூசப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு,25 லட்சம் ரூபாய் செலவிலும் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சிலைகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.வரும், 12ம் தேதி கும்பாபிேஷகம் நடப்பதை முன்னிட்டு, யாக சாலையில் ஒன்பது குண்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. கோவில் உட்பிரகாத்தில் வர்ணம் தீட்டப்படுகிறது.பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க, கோவில் முன்பாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுகிறது. பக்தர்கள் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, பாதுகாப்பை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளளது. பக்தர்களுக்கு, குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படுகிறது. கும்பாபிேஷகத்துக்கு இன்னும், ஐந்து நாட்களே உள்ளதால் கோவில் நிர்வாகத்தினர் அனைத்து பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி