உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருப்பராயர் கோவிலில் வரும் 6ல் கும்பாபிஷேகம்

கருப்பராயர் கோவிலில் வரும் 6ல் கும்பாபிஷேகம்

நெகமம்; நெகமம், தேவணாம்பாளையம் ஆலமரத்து கருப்பராயசுவாமி மற்றும் கன்னிமார் கோவிலில், வரும், ஜூன் 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.நெகமம், தேவணாம்பாளையம் ஆலமரத்து கருப்பராய சுவாமி மற்றும் கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம், வரும், ஜூன் 5ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 7:45 மணிக்கு, மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், பஞ்ச கவ்ய பூஜை, கணபதி ஹோமம் நடக்கிறது. இரவு முதல் கால யாக பூஜைகள், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, வேதபாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல் நடக்கிறது.வரும், 6ம் தேதி, விக்னேஸ்வர பூஜை மற்றும் அஷ்டலட்சுமி பூஜை, நாடிசந்தானம், திரவியாஹுதி, யாத்ராதானம், கலசம் புறப்பாடு நடக்கிறது.காலை 10:00 மணிக்கு, ஆலமரத்து கருப்பராய சுவாமி விமான கோபுர கும்பாபிஷேகம் மற்றும் கன்னிமார் கருப்பசாமிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தச தரிசனம், தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ