உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருப்பராய சுவாமி கோவிலில் வரும் 9ல் கும்பாபிேஷகம்

கருப்பராய சுவாமி கோவிலில் வரும் 9ல் கும்பாபிேஷகம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நேதாஜி ரோடு சந்தன கருப்பராய சுவாமி கோவிலில், வரும், 9ம் தேதி மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.பொள்ளாச்சி நேதாஜி ரோடு, சந்தனகருப்பராய சுவாமி கோவிலில், மஹாகும்பாபிேஷக விழா வரும், 8ம் தேதி காலை, 4:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ேஹாமம், மஹாலட்சுமி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது.மாலை, 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, முதற்கால யாக பூஜை, தம்பதி பூஜை, மஹா பூர்ணாஹுதி, தீபாராதனையும்; வரும், 9ம் தேதி காலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடக்கிறது.அதன்பின், காலை, 7:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, காலை, 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் சந்தன கருப்பராயர் விமான கலச மஹா கும்பாபி ேஷகம், மூலஸ்தானம் கருப்பராயர், விக்ர கும்பாபிேஷகமும், காலை, 10:00 மணிக்கு மஹா அபிேஷகம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு தச தரிசனம், அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை