மேலும் செய்திகள்
மீனாட்சியம்மன் கோவில் திருவிழா
23-May-2025
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, சொலவம்பாளையம், எருதுகட்டி மாரியம்மன் கோவிலில் நாளை, 28ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.கிணத்துக்கடவு, சொலவம்பாளையம், விநாயகர், மாகாளியம்மன் மற்றும் எருதுகட்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழாவில், 26ம் தேதி, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, காப்பு அணிவித்தல், மண்ணெடுத்தல், முளையிடுதல், முலைப்பாளிகை எடுத்து வருதல், முதற்கால வேள்வி நடந்தது.இன்று, 27ம் தேதி, காலை 6:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, இரண்டாம் கால வேள்வி, மலர் வழிபாடு, திருமுறை விண்ணப்பம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு, விமான கலசங்கள் நிறுவுதல், மூன்றாம் கால வேள்வி, திருமுறை விண்ணப்பம் நடக்கிறது.நாளை, 28ம் தேதி, காலை 4:30 மணிக்கு, காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, கலசங்கள் புறப்பாடு போன்றவைகள் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு, கும்பாபிேஷகம் நடக்கிறது. அதன்பின், அன்னதானம், பெருந்திருமஞ்சனம், கோ பூஜை மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
23-May-2025