மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்
26-Jul-2025
போத்தனூர்; கோவை, குறிச்சி காந்திஜி சாலையிலுள்ள குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா கடந்த மாதம் புண்ணிய வாசம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து, கொடி மரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவிலில் கொடியேற்றப்பட்டது. இரவில் அரவான் கோவில் முன், அரவானுக்கு ஆடி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை பொங்காளி யம்மன் கோவிலில் இருந்து கரகங்கள் புறப்பட்டு, கோவிலை வந்தடைந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதலும், அக்னி அபிஷேகமும் மாவிளக்கு வழிபாடும் நடந்தன. திரளானோர் தங்கள் வேண்டுதலுக்காக குண்டமிறங்கி, அம்மனை தரிசித்து சென்றனர். இன்று காலை, 9:30 மணிக்கு கொடி இறக்குதல், மாலை, 3:00 மணிக்கு மஞ்சள் நீராடல், 6:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, இரவு, 8:00 மணிக்கு மகா அபிஷேகம் ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, அனைத்து சமூக ஒருங்கிணைந்த பெரிய தனக்காரர்கள் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.
26-Jul-2025