உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறிச்சி பாதாள சாக்கடை; நவ.,க்குள் முடிக்க இலக்கு

குறிச்சி பாதாள சாக்கடை; நவ.,க்குள் முடிக்க இலக்கு

கோவை : குறிச்சி மற்றும் குனியமுத்துாரில் ரூ.591.34 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பணிகளை வரும் நவ., மாதத்துக்குள் முழுமையாக முடிக்க, குடிநீர் வடிகால் வாரியம் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறியதாவது:குறிச்சி, குனியமுத்துார் பகுதியில் பாதாள சாக்கடை சேம்பர் கட்டி, வீடுகளில் வெளியேற்றப்படும் செப்டிக் டேங்க் கழிவை சேகரிக்க ஆறு மீட்டர் துாரத்துக்கு குழாய் பதித்துள்ளோம். இணைப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போத்தனுார் ரயில்வே தண்டவாளத்தை கடந்து பாதாள சாக்கடை குழாய் கொண்டு செல்வதற்கான பணி நடக்கிறது; இம்மாதத்துக்குள் முடிக்க இருக்கிறோம்.போத்தனுார் ரயில்வே பகுதியில், 7,345 இணைப்புகள் வழங்கி, சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும், 38 ஆயிரத்து, 613 இணைப்புகள் வழங்க வேண்டும். இதில், 15 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ரயில்வே பணி முடிந்ததும் வீட்டு இணைப்புகளுக்கு 'லிங்க்' கொடுக்கப்படும். நவ., இறுதிக்குள் திட்டப்பணிகளை முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை