உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது குறிச்சி, குனியமுத்துார் பாதாள சாக்கடை திட்டம்

அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது குறிச்சி, குனியமுத்துார் பாதாள சாக்கடை திட்டம்

கோவை : குறிச்சி, குனியமுத்துார் பாதாள சாக்கடை திட்டத்தை அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.கோவை பழைய மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் இருக்கிறது. குழாய் பதித்து, 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், புதிதாக மாற்றுவதற்கு, தற்போதுள்ள மக்கள் தொகை மற்றும் கட்டடங்களின் எண்ணிக்கைக்கேற்ப, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதோடு, விடுபட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை குழாய் பதிக்க 'சர்வே' எடுக்கப்படுகிறது.தெற்கு மண்டலத்தில், குறிச்சி மற்றும் குனியமுத்துாரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.591.34 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியை அடுத்த மாதத்துக்குள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 87 முதல், 100வது வார்டு வரையிலான, 14 வார்டு மக்கள் பயன்பெறுனர்.வடவள்ளி, வீரகேரளம், துடியலுார், கவுண்டம்பாளையத்தில், 935.92 கோடி ரூபாயிலும், ஒண்டிப்புதுாரில் விடுபட்ட பகுதிகளில், 185 கோடி ரூபாயிலும் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இவ்விரு திட்ட பணிகளையும், 2026 பிப்., மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல், சின்ன வேடம்பட்டி, சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு பகுதிகளிலும், பணிகள் நடந்து வருகின்றன.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''குறிச்சி, குனியமுத்துார் பாதாள சாக்கடை திட்டம், இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. ரயில்வே பகுதியில் குழாய் பதிக்கும் பணி, இம்மாதத்தில் முடிக்கப்படும். இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, பிப்.,யில் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை