கூலித் தொழிலாளி கைது
சூலுார் : சூலுார் அடுத்த ராசிபாளையத்தை சேர்ந்த சுரேஷ் மனைவி சாந்தி, 41. இந்த தம்பதியை முன் விரோதம் காரணமாக, அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான குணசேகரன்,52, என்பவர் தகாத வார்த்தைகள் பேசி, தாக்கியுள்ளார். இதுகுறித்து சாந்தி, சூலுார் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், குணசேகரனை கைது செய்தனர்.