உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

போத்தனூர்; கோவைப்புதூர் அருகே குளத்துபாளையம், அய்யாகவுண்டர் வீதியிலுள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, வாஸ்து பூஜையுடன் துவங்கியது.பிரவேச பலி, தீர்த்தம், முளைப்பாரி எடுத்து வருதல், யாகசாலை பிரவேசம், பாராயணம் உள்ளிட்டவை நடந்தன.இரவு மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, நாடி சந்தானம், பிராண பிரதிஷ்டை நடந்தன. 9:30 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, கடங்கள் புறப்பாடும் நடந்தன.இதையடுத்து, மகா கும்பாபிஷேகத்தை கெரடி கோவில், அப்பண்ணாச்சாரியார் சுவாமிகள் நடத்தினார். இதனை தொடர்ந்து தச தானம், தச தரிசனம், சாற்றுமுறையும், மதியம் அன்னதானமும் நடந்தன. திரளானோர் பெருமாளை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி