மேலும் செய்திகள்
மஹா ருத்ர பாராயணம்
06-May-2025
கோவை; கோடி விஷ்ணு நாம பாராயண கமிட்டி சார்பில் லலிதா, விஷ்ணு சஹஸ்ரநாமபாராயணம் மற்றும் அனுமன் சாலீசா ஆகியவை கோயமுத்துார் சற்குரு சேவாஸ்ரமத்தில் பக்தர்கள் பாராயணம் செய்தனர். இந்தியா வல்லரசாக வேண்டும், இந்தியா-பாக் போர் மீண்டும் துவங்ககூடாது, போர்பதட்டம் ஏற்படக்கூடாது என்ற வேண்டுகோள்களை முன் வைத்து கோடி விஷ்ணு நாம பாராயண கமிட்டி சார்பில் லலிதா, விஷ்ணு சஹஸ்ரநாமபாராயணம் மற்றும் அனுமன் சாலீசா ஆகியவை பாராயணம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று பாராயணம் செய்தனர்.கார்கில் போரில் பங்கேற்ற கர்னல் சதீஷ், முன்னாள் ராணுவத்தினரான சுப்ரமணியம் மற்றும் ரவீந்திரன் ஆகியோரை பாராட்டி மரியாதை செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொறிவாளர் டாக்டர் அரவிந்தன், இ.ம.க.,தலைவர் அர்ஜூன்சம்பத், சேவாபாரதி அறங்காவலர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
06-May-2025