மேலும் செய்திகள்
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் பூஜை
02-Jan-2025
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே கண்ணார்பாளையத்தில் உள்ள அம்பாள் சாரதாம்பிகை கோவிலில், தைப்பொங்கல் விழா மற்றும் 39ம் ஆண்டு திருவிளக்கு வழிபாடு நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். இக்கோவிலின் வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு அபிஷேகம் அலங்காரம் பூஜை செய்யப்பட்டது.தொடர்ந்து வளாகத்தில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 39ம் ஆண்டை தொடர்ந்து வளாகத்தில் உள்ள ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் தைப்பொங்கல் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது. அதே போல் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சீனிவாச பெருமாளுக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின் விளையாட்டுப் போட்டிகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
02-Jan-2025