உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகம்; கோவை எம்.பி., ஆய்வு

பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகம்; கோவை எம்.பி., ஆய்வு

அன்னுார்; கோவில்பாளையத்தில், கோவை எம்.பி.,ராஜ்குமாரிடம், கோவை -சத்தி பசுமை வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் கோவில்பாளையம், கிரவுன் சிட்டி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், நேற்றுமுன்தினம் மனு அளிக்கப்பட்டது. எம்.பி.,யிடம் மக்கள் பேசுகையில், 'ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், நான்கு வழிச்சாலை அமைக்க போதுமான அகலம் உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றலாம். தேவைப்படும் இடத்தில் மேம்பாலம் அமைக்கலாம். விவசாய நிலங்கள், வீடுகள், தொழிற்சாலைகளை கையகப்படுத்த தேவையில்லை' என்றனர்.இதையடுத்து கோவை எம்.பி., ராஜ்குமார், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டோர் கோவில்பாளையத்தில் பசுமை வழிச்சாலைக்காக கையகப்படுத்த திட்டமிட்டுள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்தனர்.வரைபடத்தில் உள்ள பகுதிகள் குறித்து விசாரித்தனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, விவசாய நிலங்கள், வீடுகளை கையகப்படுத்துவதை தவிர்க்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை