உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிலம் எடுப்பு தனி தாசில்தார் அலுவலகம் இடம் மாற்றம்

நிலம் எடுப்பு தனி தாசில்தார் அலுவலகம் இடம் மாற்றம்

பொள்ளாச்சி: உடுமலையில் செயல்பட்டு வந்த நில எடுப்பு தனி தாசில்தார் அலுவலகம், கோவைக்கு மாற்றப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா தேசிய நெடுஞ்சாலை எண், 209ல் உடுமலை அந்தியூர் எல்லையில், கோமங்கலம்புதுார் முதல் ஒக்கிலிபாளையம் ஆஞ்சநேயர் கோவில் வரை சாலை அமைக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் நில எடுப்பு செய்யப்பட்டுள்ளது.நிலம் எடுப்புக்கு இழப்பீட்டுத்தொகை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்பிக்க மற்றும் விபரங்களை அறிந்து கொள்ள தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) அலுவலகம், தே.நெ.எண்., 209, சி.எம்., டவர்ஸ், பழநி ரோடு, எஸ்.ஆர்.கே., ேஹாண்டா அருகில், உடுமலை என்ற முகவரியில் செயல்பட்டு வந்தது.தற்போது, அந்த அலுவலகம், கடந்த, 1ம் தேதி முதல் கதவு எண், 3, சவரிமுத்து செட்டியார் வீதி, ஓம் சக்தி மருத்துவமனை பின்புறம், ரெட்பீல்ட்ஸ், கோவை -45 (தொலைபேசி எண்: 0422 - 2320382) என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) நெடுஞ்சாலை (திட்டங்கள்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஆவணங்களை சமர்பிக்க வேண்டிருப்பின் அதனை சமர்பிக்குமாறு தேவைப்படும் விபரங்களை பெற்று பயன் பெறலாம்.இத்தகவலை, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ