உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லேப்டாப் அடிக்கடி பழுது; இழப்பீடு வழங்க உத்தரவு

லேப்டாப் அடிக்கடி பழுது; இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை; நீலகிரி மாவட்டம், ஜெகதளா, காரகோரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர், கோவை 'ப்ருக் பீல்ட்ஸ்' மாலிலுள்ள 'எச்.பி., - ஐ.டி., வேர்ல்டு' கடையில், எச்.பி., ஓமென் லேப்டாப்-2023 மாடல், மே, 18ல் வாங்கினார். அதன் விலை, 1.17 லட்சம் ரூபாய். லேப்டாப்பை பயன்படுத்திய சில நாட்களில் பழுதானது. தொடர்ந்து பழுது ஏற்பட்டதால், வேறு லேப்டாப் வழங்க கேட்டார். அதற்கு மறுத்த நிறுவனம், பணத்தை திருப்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை.பாதிக்கப்பட்ட ஜெயராமன், இழப்பீடு வழங்கக்கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால், லேப்டாப்க்காக, 1.14 லட்சம் ரூபாயை மனுதாரருக்கு திருப்பிக் கொடுப்பேதாடு, மன உளைச்சலுக்கு இழப்பீடு மற்றும் வழக்கு செலவு தொகை, 15,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி