உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மறைந்த இ.கம்யூ., நிர்வாகி படத்திறப்பு 

மறைந்த இ.கம்யூ., நிர்வாகி படத்திறப்பு 

கோவை; கோவை பி.என்.புதுாரில், இ.கம்யூ., மூத்த நிர்வாகி ராமசாமி நினைவேந்தல் கூட்டம், கிளை அலுவலகத்தில் நடந்தது. திருப்பூர் எம்.பி., சுப்பராயன், மறைந்த ராமசாமியின் உருவ படத்தை திறந்து வைத்தார். அவர் பேசுகையில், ''மறைந்த ராமசாமி நீண்டகாலம் பி.என்.புதுார் இ.கம்யூ., கிளை செயலாளராக இருந்து, கட்சிப்பணி செய்தவர். தெலுங்குபாளையம் முன்னாள் பேரூராட்சியின் உறுப்பினராக இருந்து, அப்பகுதி மக்களுக்கு பணியாற்றியுள்ளார்,'' என்றார். இ.கம்யூ., தெற்கு கிளை செயலாளர் தங்க வேல், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம், கவுன்சிலர் சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை