உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொடிசியாவில் வரும் 9ம் தேதி பில்டு இன்டெக் கண்காட்சி வீடு கட்ட பைபர் ராடு அறிமுகம்

கொடிசியாவில் வரும் 9ம் தேதி பில்டு இன்டெக் கண்காட்சி வீடு கட்ட பைபர் ராடு அறிமுகம்

கோவை, பிப். 7 -கோவையில் கட்டடம் மற்றும் கட்டுமான பொருட்கள் தொடர்பான, 'பில்டு இன்டெக் 2024' கண்காட்சி, கோவை கொடிசியா வணிக வளாகத்தில், வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.இது குறித்து நடந்த நிருபர்கள் சந்திப்பு கூட்டத்தில், பில்டு இன்டெக் கண்காட்சி தலைவர் சிவக்குமார் கூறியதாவது: கோவையில், 13வது 'பில்டு இன்டெக்' கண்காட்சி, வரும் 9ம் தேதி கொடிசியா வணிக வளாகத்தில் துவங்க உள்ளது. கலெக்டர் கிராந்திகுமார் துவங்கி வைக்கிறார். நான்கு நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில், 200க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 257 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் இருந்து, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கண்காட்சியில், கட்டட ஆட்டோமேஷன், மேம்படுத்தப்பட்ட எம் சாண்ட் மற்றும் பி சாண்ட் (மணல்) கட்டுமான வேதிப்பொருட்கள், பிரீகாஸ்ட் கட்டடங்கள், கட்டுமான இயந்திரங்கள், கட்டடம் மற்றும் கட்டுமானம் சார்ந்த தொழில்கள் தொடர்பான, ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. கட்டடங்கள் கட்ட பயன்படுத்தப்படும், இரும்பு கம்பிகளுக்கு பதிலாக, முதல் முறையாக பைபர் ராடுகள் பயன்படுத்தும் தொழில் நுட்பம், இந்த கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படுகின்றன. வீடுகள் டிசைன் செய்யும் 'விர்ச்சுவல் ரியாலிட்டி' தொழில் நுட்பமும் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு, இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.கொடிசியா தலைவர் திருஞானம் மற்றும் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ