உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு

வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு

கோவை; திருப்பூர் மாவட்டம், தாராபுரம், முத்துநகரை சேர்ந்தவர் முருகானந்தம்,41; மாற்றுத்திறனாளி. சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்தார். இவரது உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து பிரச்னை தொடர்பாக, கோர்ட் அனுமதியுடன் இடத்தை அளக்க சென்ற போது, வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்தும், கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யக்கோரியும், கோவை வக்கீல் சங்கத்தினர், இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை