சிறுதுளி வனிதா மோகனுக்கு தலைமைத்துவ விருது
கோவை: புட்டபர்த்தி பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா நடந்து வருகிறது. ஒரு உலகம் ஒரு குடும்பம் என்ற தலைப்பின் கீழ், நமது நாட்டில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு உலகளாவிய தலைமைத்துவ விருது வழங்கும் விழா, கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள முதனஹள்ளி சத்ய சாய் கிராம சேவா மையத்தில், சமீபத்தில் நடந்தது. அதில், கோவை 'சிறுதுளி' அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு, சத்ய சாய் கிராம சேவா தலைவர் மதுசூதன் சாய், உலகளாவிய தலைமைத்துவ விருது வழங்கி கவுரவித்தார்.