உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதான குழாயில் கசிவு; குடிநீர் வீணாகிறது

பிரதான குழாயில் கசிவு; குடிநீர் வீணாகிறது

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோட்டில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. கிணத்துக்கடவிலிருந்து சொக்கனூர் செல்லும் ரோட்டில், தனியார் லே-அவுட் முன்பாக ரோட்டின் ஓரத்தில் அம்பராம்பாளையம் குடிநீர் திட்ட குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இது ஒரு மாதகாலமாக சரி செய்யப்படாமல் இருப்பதால், அதிகளவில் குடிநீர் வீணாகிறது. கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தேவை அதிகரித்து வரும் நிலையில், குடிநீர் ரோட்டில் வழிந்து ஓடுவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, குழாய் சேதமடைந்த பகுதியை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !