உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கராத்தே கற்பதால் சுயஒழுக்கம் வளரும்

கராத்தே கற்பதால் சுயஒழுக்கம் வளரும்

கோவை;தடாகம் ரோடு, கே.என்.ஜி., புதுார் பிரிவு, அக்சரா அகாடமி பள்ளியில், ஹாயாசாய் கராத்தே அகாடமி பெடரேசன் ஆப் இந்தியா சார்பில், 'கலர் பெல்ட் 2024'ம் ஆண்டிற்கான தேர்வு நடந்தது. தேர்வில் பங்கேற்ற சிறந்த மாணவர்களை, சிறப்பு விருந்தினர் சிஹான் மனோகரன் கவுரவித்தார்.அவர் பேசுகையில், ''தற்காப்பு கலையான கராத்தேவை பயில்வதால், சுயஒழுக்கம், கட்டுப்பாடு வளரும். உடல்நலத்துடன், மனநலத்தையும் பேண, இதுபோன்ற தற்காப்பு கலைகளை மாணவர்கள் கற்க வேண்டும்,'' என்றார். பள்ளியின் தாளாளர் கிரீசன், பொருளாளர் ப்ரெடி, முதல்வர் பிரமிளா மற்றும் ஆசியர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ