மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்
13-Jan-2025
கோவை; கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள, நேஷனல் மாடல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 19வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்து, நிகழ்வு களை துவக்கிவைத்தார். அவர் பேசுகையில், ''பள்ளி, கல்லுாரி காலங்களை வீணாக்கிவிடாதீர்கள். நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துபவர்களே வெற்றியாளர்களாக திகழமுடியும். பள்ளி, கல்லுாரி காலங்கள் மட்டுமின்றி வாழ்நாள் முழுவதும் கற்றல் தொடர வேண்டும்,'' என்றார்.இந்நிகழ்வில், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி தலைவர் மோகன் சந்தர், செயலாளர் உமா, முதல்வர் கீதாராணி, துணை முதல்வர் லாவண்யா, ஸ்போர்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் விவேக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
13-Jan-2025