இரட்டை இலையை பெற சட்ட போராட்டம்: பன்னீர்
கோவை: ''இரட்டை இலை சின்னத்தைப் பெற சட்டப்பூர்வமாக போராடுவோம்,'' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வரும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், கோவை மாவட்டம் அன்னுார் அருகே தன் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக நேற்று வந்தார்.அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து அவரை வரவேற்றனர். பின்னர் பேட்டியளித்த பன்னீர்செல்வம், ''அ.தி.மு.க., உண்மை தொண்டர்களும், பொதுமக்களும் எங்கள் பக்கம் தான் உள்ளனர். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தொடர்ந்து சட்டப்பூர்வமாக போராடுவோம். நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். எங்கள் அடுத்தகட்ட அரசியல் நிகழ்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்,'' என்றார்.