உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி ரோட்டில் சிறுத்தை நடமாட்டம்; வனத்துறையினர் எச்சரிக்கை

பொள்ளாச்சி ரோட்டில் சிறுத்தை நடமாட்டம்; வனத்துறையினர் எச்சரிக்கை

வால்பாறை; பொள்ளாச்சி ரோட்டில் சிறுத்தை நடமாடுவதால், சுற்றுலாபயணியர் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.சமீப காலமாக வால்பாறை நகரில் இரவு நேரத்தில், சிறுத்தை உலா வந்து குடியிருப்பு பகுதியில் உள்ள நாய், கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளை கவ்விச்செல்கிறது.இந்நிலையில், வால்பாறை நகரில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் உள்ள பொள்ளாச்சி செல்லும் ரோட்டில், புதுத்தோட்டம் பகுதியில் சிறுத்தை அடிக்கடி ரோட்டில் உள்ள தடுப்புச்சுவர் மீது ஓய்வெடுக்கிறது. இதனால், இரவு நேரத்தில் இதன் வழியாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாபயணியர் பீதியடைந்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில், வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. புதுத்தோட்டம் அடர்ந்த வனப்பகுதி என்பதால், இங்கு அனைத்து வகையான வனவிலங்குகள், யானை, காட்டுமாடு, புலி, சிறுத்தை, பறவைகள், சிங்கவால் குரங்குகள், மான்கள் உள்ளிட்டவை உள்ளன.எனவே இரவு நேரத்தில், வன விலங்குகள் ரோட்டை கடக்கும் என்பதால், சுற்றுலாபயணியர் தங்களது வாகனங்களை கவனமாகவும், மெதுவாகவும் இயக்க வேண்டும். ரோட்டில் உலா வரும் வன விலங்குகளை துன்புறுத்தவோ, செல்பி எடுக்கவோ கூடாது. மீறினால் சுற்றுலாபயணியர் மீது, வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !