உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழுநோய் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

தொழுநோய் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

கோவை: கோவை முழுவதும் தொழுநோய் கணக்கெடுப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், மாநில அளவில் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் துவங்கியது. கோவையில் 18.37 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20ம் தேதி வரை, முதல்கட்ட கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும். தன்னார்வலர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மருத்துவபணிகள் துணை இயக்குனர் (தொழுநோய் ஒழிப்பு) சிவக்குமாரி கூறுகையில், ''தொழுநோய் நாட்டை விட்டு முற்றிலும் நீக்கும் வகையில் இப்பணிகள் நடக்கின்றன. தயக்கம், அச்சம் தேவையில்லை. பரிசோதனைக்கு தாமாக முன்வந்து மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். குறிப்பாக, ஆதார், பான், வங்கிக்கணக்கு போன்ற எந்த தகவலும் பெறப்படுவதில்லை. அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் பெயர், முகவரி, போன்ற அடிப்படை விபரம் பெறப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி