உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வடகிழக்கு பருவ மழைக்கு முன் நீர்வழித்தடங்களை துார்வாரலாமே

வடகிழக்கு பருவ மழைக்கு முன் நீர்வழித்தடங்களை துார்வாரலாமே

தொண்டாமுத்துார் : தொண்டாமுத்துார் வட்டாரத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ள ஓடைகள், பள்ளவாரி ஓடைகளாக வாய்க்கால் மற்றும் நொய்யல் ஆற்றில் இணைகிறது. நரசீபுரம், தேவராயபுரம், குப்பேபாளையம், தொண்டாமுத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளவாரி ஓடைகளில், வடகிழக்கு பருவமழை காலங்களில், நீர்வரத்து காணப்படும். இந்த நீர், நேரடியாக நொய்யல் ஆற்றில் கலக்கிறது. சுள்ளி பள்ளம், இச்சுக்குழி பள்ளம், கோடாங்கி பள்ளங்களில், முட் செடிகள் நிறைந்து காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில், பள்ளவாரி ஓடைகளில் வரும் நீர், நொய்யல் ஆற்றுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மழை காலத்துக்கு முன், புதர் நிறைந்த பள்ளவாரி ஓடைகளை துார்வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ