உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஸ்கோர்சில் போகலாம் வாக்; வாங்கலாம் ஷாக் திறந்து கிடக்கும் ஸ்விட்ச் பாக்சுக்கு மூடி போட ஆளில்லையா

ரேஸ்கோர்சில் போகலாம் வாக்; வாங்கலாம் ஷாக் திறந்து கிடக்கும் ஸ்விட்ச் பாக்சுக்கு மூடி போட ஆளில்லையா

மின்விபத்து அபாயம்

ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், 'இ.பி.எல் - 37' என்ற எண் கொண்ட கம்பத்தில், ஸ்விட்ச் பாக்ஸ், நீண்ட நாட்களாக திறந்தநிலையில் உள்ளது. வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ஒயர்களை குழந்தைகள் தொடுவதற்கு வாய்ப்புள்ளது. உடனடியாக மூட வேண்டும்.- யுவராஜ், திருமகள் நகர்.

துரத்தும் நாய்கள்

இடையர்பாளையம், ராகவேந்திரா ரெசிடென்சி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோரை துரத்தி கடிக்கின்றன. குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.- ரஞ்சனி, இடையர்பாளையம்.

மோசமான சாலை

கு.வடமதுரை, குருடம்பாளையம், கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் தார் சாலை வசதியில்லை. சாலை முழுவதும் வெறும் ஜல்லிக்கற்களாக இருக்கிறது. கற்களில் இடறி, வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சரிவர குப்பை அகற்றாததால், தெருக்களில் ஆங்காங்கே குப்பை தேங்கியுள்ளது.- விஜயா, கதிர்நாயக்கன்பாளையம்.

தெருநாய்களால் தொல்லை

வீரபாண்டி நான்கு, சாந்திமேடு, வள்ளலார் நகர் பகுதியில் சாலையில் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றுகின்றன. நாய்கள் துரத்துவதால், வாகனஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். - கார்த்திக், சாந்திமேடு.

போக்குவரத்திற்கு இடையூறு

டவுன்ஹால், தெலுங்கு பிராமணர் வீதி, கோபால் கற்பூர கம்பெனி அருகில், தனியார் டெலிபோன் நிறுவனம் சாலையோரம், இரும்பு கம்பி பதித்துள்ளது. இது, போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறாக உள்ளது. வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கவும் வாய்ப்புள்ளது.- நாகராஜ், டவுன்ஹால்.

குண்டும், குழியுமான ரோடு

வெள்ளக்கிணறு, ஹட்கோ காலனி, பேஸ் - 2 முதல் என்.ஜி.ஓ., காலனி வரையுள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. வாகனங்களை இயக்குவது பெரும்பாடாக உள்ளது. தினமும் இச்சாலையில் விபத்து நடக்கிறது.- ரங்கராஜன், வெள்ளக்கிணறு.

பத்தாத குடிநீர்

சேரன்நகர், எஸ்.பி.எம்., கிரீன் சிட்டியில், கடந்த நான்கு மாதங்களாக இரண்டு மணிநேரத்திற்கும் குறைவாகவே தண்ணீர் வருகிறது. பாதி தொட்டி கூட நிரம்புவதில்லை. போதிய தண்ணீரின்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.- மதிவாணன், சேரன்நகர்.

குடிநீருக்காக காத்திருக்கிறோம்

சிங்காநல்லுார், ஐந்தாவது வார்டு, சத்தி ரோடு, எழில் நகர் குடியிருப்பிற்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. போதிய தண்ணீரின்றி சொல்லமுடியாத இன்னலை பொதுமக்கள் சந்தித்துவருகின்றனர். - சிவக்குமார், சிங்காநல்லுார்.

வீணாகும் குடிநீர்

போத்தனுார், செட்டிபாளையம் ரோடு, முருகன் நகரில், மகா லட்சுமி பேக்கரி அருகில், குழாய் உடைந்து பெருமளவு தண்ணீர் சாலையில் ஓடுகிறது. விரிவாக்கம் செய்தாலும், ஆக்கிரமிப்புகளால் சாலை மிகவும் குறுகலாக இருக்கிறது.- பத்ரி, போத்தனுார்.

மாட்டும் வாகனங்கள்

வரதராஜபுரம், சாய் மஹால் அருகில், சாக்கடை கால்வாய் அருகே சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. கால்வாய் சிலேப்புகளும் சிதிலமடைந்துள்ளன. கனரக வாகனங்கள் செல்லும் போது, சாலையில் மாட்டிக்கொள்கின்றன. - நடராஜன், வரதராஜபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ