உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கனிமவளத்துறையில் ஊழல் முற்றுப்புள்ளி வைக்கலாமே!

கனிமவளத்துறையில் ஊழல் முற்றுப்புள்ளி வைக்கலாமே!

பொள்ளாச்சி; ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் வேலு, ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யிடம் மனு கொடுத்தார். மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்ட கனிம வளம், புவியியல் மற்றும் சுரங்க துறை அதிகாரிகள் சிலரது துணையுடன் அன்றாடம் விதிமீறல்கள் நடக்கின்றன. இதன் விளைவாக, அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. சுரங்கங்களை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, நீர் நிலைகள் மாசடைந்து, இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. கல்குவாரி முறைகேடு விதிமீறல்களால், கிராம மக்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, பொது நலனை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !