நுாலக கட்டடம் திறப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சமத்துார் கிருஷ்ணா கார்டனில், 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நுாலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடம், தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.சமத்துார் பேரூராட்சி தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரஞ்சித்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவராஜ், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் அகத்துார் சாமி முன்னிலை வகித்தனர்.பொள்ளாச்சி நுாலகர்கள் ஆனந்தகுமார், மணிவேல் மற்றும் நுாலகர்கள், வாசகர் வட்ட தலைவர் நாச்சிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நுாலகர் ரமேஷ் நன்றி கூறினார். நுாலகத்துக்கு நிரந்தர புதிய கட்டடம் உருவானதால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.