உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைந்த எடையில் செயற்கை கால் பொருத்தம் கோவை அரசு மருத்துவமனையில் அபாரம்

குறைந்த எடையில் செயற்கை கால் பொருத்தம் கோவை அரசு மருத்துவமனையில் அபாரம்

- நமது நிருபர் - தமிழக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், முதன்முறையாக கோவை அரசு மருத்துவமனையில், அதிநவீன கார்பன் பைபர் பயன்படுத்தி, 500 கிராமிற்கும் குறைவாக செயற்கை கால் தயாரித்து, கால் அகற்றப்பட்ட சிறுவனுக்கு பொருத்தப்பட்டது.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கை, கால்கள், அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட நோயாளிகள், செயற்கை உடல் உறுப்புகள் பொருத்த, சென்னை செல்லவேண்டிய சூழல் இருந்தது.கடந்த, 2020ம் ஆண்டு முதல் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் செயற்கை அவயங்கள் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டு இதுவரை, 200க்கும் மேற்பட்டவர்களுக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.சமீபத்தில், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த சிறுவன் ரிஸ்வந்த் பிறவியிலேயே கால்கள் சிதைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். எலும்பு முறிவு பிரிவில், பிறவி கால் ஊனம் காரணமாக பாதிக்கப்பட்ட, வலது கால் முட்டிக்கு கீழ் அறுவைசிகிச்சை செய்து அகற்றப்பட்டது.அறுவை சிகிச்சைக்கு பின், உடலியல் மற்றும் மறுவாழ்வு மருத்துவ சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதித்து, செயற்கை உடல் அவயங்கள் தயாரிக்கும் நிலையத்தில் அளவுகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து, நடைபயிற்சி கொடுக்கப்பட்டது.இதுகுறித்து, எலும்பு முறிவு பிரிவு தலைவர் வெற்றிவேல் செழியன் கூறுகையில், ''தனியார் மருத்துவமனைகளில் இச்சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டும். முதல்வர் காப்பீடுதிட்டம் வாயிலாக இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. சிறுவன் தற்போது, தன்னிச்சையாக நடக்கிறான்,'' என்றார்.எலும்பு முறிவு பிரிவு மருத்துவ குழுவினரை, டீன் நிர்மலா பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை