மானியத்தில் திரவ நுண்ணுயிரி ஊக்கி
ஆனைமலை; ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், வெயிலின் தாக்கம் உள்ளது. இதில் இருந்து பயிர்களை காக்க, திரவ நுண்ணுயிரி ஊக்கி மானியத்தில் வழங்கப்படுகிறது.ஆனைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:'நியூட்ரிசாப்' எனும் வறட்சி காலத்தில், மானாவாரி பயிர்கள் வெப்ப தாக்குதலில் இருந்து மீண்டு, சிறந்த விளைச்சலுக்கு ஊட்டமளிக்கும், திரவ நுண்ணுயிரி ஊக்கி இலைவழி தெளிப்பு செய்யலாம்.இது, ஐம்பது சதவீத மானிய விலையில், ஆனைமலை, கோட்டூர் அரசு வேளாண் விரிவாக்க கிடங்குகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதிகபட்சம், ஐந்து ஏக்கர் வரை ஒரு விவசாயிக்கு வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் வரை பரிந்துரை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர், 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.