மேலும் செய்திகள்
'பார்க்கிங்' செய்த பைக் திருட்டு
16-Sep-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு முள்ளுப்பாடி டாஸ்மாக் பார் அருகே, மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லை சேர்ந்தவர் விக்ரம், 23, கூலித்தொழிலாளி. இவர் கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி அரசு மதுபான டாஸ்மாக் கடை பார் அருகே சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விக்ரமிடம் விசாரித்ததில் மது விற்பனை செய்தது உறுதியானது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து, 49 மது பாட்டில்கள் மற்றும் 1,650 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரை கைது செய்தனர்.
16-Sep-2025