உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொன்னா கேளுங்க இது ஆபத்தான பகுதி! ஆழியாறில் அத்துமீறும் சுற்றுலா பயணியர்

சொன்னா கேளுங்க இது ஆபத்தான பகுதி! ஆழியாறில் அத்துமீறும் சுற்றுலா பயணியர்

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை ஒட்டி நீர்நிலைகளில், அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், தடையை மீறி நுழையும் சுற்றுலா பயணியரால் அசாதாரண சூழல் நிலவுகிறது.பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு அணை பகுதிக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர், ஆழியாறு தடுப்பணையில் குளித்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.இதையடுத்து, ஆழியார் அணை, ஆறு உள்ளிட்ட நீர் நிலை ஒட்டிய பகுதிகளில், நீர்வளத்துறை சார்பில் குளிக்க தடைவிதிக்கப்பட்டு விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டது. போலீசார் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.ஆனால், ஐந்து நாட்கள் மட்டுமே கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, சுற்றுலா பயணியரை கண்காணித்து, எச்சரிக்கை விடுக்க எவரும் இல்லாததால், ஆபத்தான நீர்நிலைப் பகுதிகளில் சுற்றுலா பயணியர் நுழைந்து வருகின்றனர். குழந்தைகள், பெரியவர்கள் என பலரும், அணைக்கான நீர்வரத்து உள்ள ஆறுகளில் குளிக்கவும், போட்டோ எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.தன்னார்வலர்கள் கூறியதாவது: ஆழியாறு அணையை ஒட்டிய சுற்றுலா பகுதிகளில், ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்தால், சில நாட்கள் மட்டுமே துறை ரீதியான கண்காணிப்பு நடக்கிறது. அதன்பின், எவரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது கிடையாது.தற்போது, கோடை விடுமுறை என்பதால், பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து அதிகப்படியான சுற்றுலா பயணியர், இப்பகுதிக்கு வருகை புரிகின்றனர். அத்துமீறலில் ஈடுபடும் சுற்றுலா பயணியரை கண்டறிந்து எச்சரிக்கை விடுக்க, கண்காணிப்பு அதிகாரிகள் இல்லாததால், அசாதாரண சூழல் நிலவுகிறது. கோடை விடுமுறை முடியும் வரை, ஆபத்தான இடங்களில் கண்காணிப்பில் தீவிரம் காட்ட வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ