உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்;  விவசாயிகளுக்கு அழைப்பு

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்;  விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுவதால், கால்நடை வளர்ப்போர் அதனைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், தென்னை சாகுபடியைத் தொடர்ந்து, கால்நடை வளர்த்தலும் பிரதான தொழிலாகும். பால் உற்பத்திக்காக, அதிகப்படியான விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, கறவை மாடு வளர்ப்பதில் வருவாய் கிடைப்பதால், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.இதற்காக, பொள்ளாச்சி கோட்டத்தில், 39 கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கால்நடை துறையால், பல்வேறு சேவைகள் வழங்கப்படும் நிலையில், தற்போது, மழை பெய்வதால், கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கால்நடைத்துறை சார்பில், சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.கால்நடை துறையினர் கூறியதாவது:கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக, நடப்பு நிதியாண்டுக்கான, சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.பொள்ளாச்சி கோட்டத்தில், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை என, நான்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளிலும், ஒன்றியத்துக்கு தலா, 12 முகாம்கள் வீதம், மொத்தம் 48 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.முகாமில், நோய் பாதித்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தவிர, குடற்புழு நீக்கம், தடுப்பூசி செலுத்தப்படும். ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, சினை சரிபார்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை, கருப்பை மருத்துவ உதவி உள்ளிட்ட நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.கால்நடை வளர்ப்போர், அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி கூடுதல் விபரங்கள் பெறலாம்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி